/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தரணிவராகர் கோவிலில் பிரம்மோத்சவம் துவக்கம்
/
தரணிவராகர் கோவிலில் பிரம்மோத்சவம் துவக்கம்
ADDED : அக் 04, 2025 02:12 AM

பொதட்டூர்பேட்டை:தரணிவராக சுவாமி கோவிலில், நேற்று காலை பிரம்மோத்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
பொதட்டூர்பேட்டை அடுத்த மேல்பொதட்டூரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத தரணிவராக சுவாமி கோவில் அமைந்துள்ளது. பழமையான இக்கோவிலின் பிரம்மோத்சவம், நேற்று காலை 7:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இரவு 7:00 மணிக்கு சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலா எழுந்தருளினார். புரட்டாசி மாதம் மூன்றாம் சனிக்கிழமையான இன்று இரவு 7:30 மணிக்கு, கருடசேவை நடைபெற உள்ளது.
நாளை இரவு அனுமந்த வாகனத்தில் சுவாமி உலா வருகிறார்.
நாளை மறுநாள் காலை 9:30 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறும். அதை தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு ஊஞ்சல் சேவையும், இரவு 7:00 மணிக்கு கஜ வாகனத்திலும் பெருமாள் எழுந்தருளுகிறார். 7 ம் தேதி காலை 10:30 மணிக்கு பிரம்மோத்சவம் நிறைவு பெறுகிறது.