/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பஸ் ஸ்டாண்ட் நுழைவாயிலில் தேங்கிய மழைநீரால் அவதி
/
பஸ் ஸ்டாண்ட் நுழைவாயிலில் தேங்கிய மழைநீரால் அவதி
ADDED : அக் 04, 2025 02:11 AM

ஊத்துக்கோட்டை,:த்துக்கோட்டை பேருந்து நிலைய நுழைவாயிலில் தேங்கிய மழைநீரால், பயணியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஊத்துக்கோட்டை பேருந்து பணிமனையில் இருந்து, 35க்கும் மேற்பட்ட பேருந்துகள், சென்னை கோயம்பேடு, காஞ்சிபுரம், ஆந்திராவின் திருப்பதி, நெல்லுார், சூலுார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படுகின்றன. அதேபோல், தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
பெரும்பாலான பேருந்துகள், பஜார் பகுதியில் உள்ள பேருந்து நிலையம் சென்று பயணியரை ஏற்றி, இறக்கி செல்கின்றன. பேருந்து நிலைய நுழைவாயிலில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி குளமாக மாறி விடுகிறது.
இந்த வழியாக நடந்து செல்லும் பயணியர், வழுக்கி விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே, பேரூராட்சி நிர்வாகம் பேருந்து நிலைய நுழைவாயிலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.