/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி
/
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி
ADDED : அக் 25, 2025 09:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், நேற்று மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு தினம், அறுவை சிகிச்சை துறையின் சார்பில் அனுசரிக்கப்பட்டது. மருத்துவமனை முதல்வர் ரேவதி துவக்கி வைத்தார்.
மருத்துவர், செவிலியர் கல்லுாரி மாணவ - மாணவியர் உட்பட 200க்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர். நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து, பொதுமக்களிடையே மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

