/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தொடர் மழையால் செங்கல் சூளைகள் பாதிப்பு
/
தொடர் மழையால் செங்கல் சூளைகள் பாதிப்பு
ADDED : மே 31, 2025 11:21 PM

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதிகளில் மலைகளை ஒட்டிய தரிசு நிலங்களில் செங்கல் சூளை அமைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, கோடைக்காலத்தில் இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெறும்.
வெயிலில் செங்கற்களை காய வைக்க முடியும் என்பதால், மார்ச் - மே மாதம் வரை அதிகளவில் செங்கல் உற்பத்தி செய்யப்படுகிறது. கோடைக்காலத்தில் தயாரிக்கப்படும் செங்கற்கள், ஆண்டு முழுதும் இருப்பு வைத்து விற்பனை செய்யப்படும்.
குறிப்பாக, ஐப்பசி - கார்த்திகை வரையிலான மழைக்காலத்தில், செங்கல் உற்பத்தி இருக்காது. அப்போது, செங்கல் தேவை அதிகரித்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படும்.
தற்போது, முழுவீச்சில் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள செங்கல் சூளைகள், ஒரு வாரமாக தொய்வடைந்துள்ளன. ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதியில் ஒரு வாரமாக கோடை மழை பெய்து வருவதால், செங்கல் தயாரிப்பு முடங்கியுள்ளது.