/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆறுவழி சாலையில் பால பணி தீவிரம்
/
ஆறுவழி சாலையில் பால பணி தீவிரம்
ADDED : பிப் 21, 2025 01:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பட்டு:திருவள்ளூர் மாவட்டம், தச்சூரில் இருந்து, ஆந்திர மாநிலம், சித்தூர் வரை, ஆறுவழி சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் கடந்த ஆண்டு துவங்கி, இரவு, பகலாக நடந்து வருகிறது.
தற்போது, பாலங்கள் அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. பள்ளிப்பட்டு அடுத்த, பொம்மராஜிபேட்டையில் இருந்து, மேலப்பூடி செல்லும் வழியில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கான்கிரீட் பாலங்களின் உத்திரங்களை இயந்திரங்கள் வாயிலாக பாலத்தில் நிறுத்தும் பணி நேற்று துவங்கியது. பாலத்திற்கு இணையாக சாலையின் உயரத்தையும் மண் கொட்டி உயர்த்தும் பணியும், துரித கதியில் நடைபெற்று வருகிறது.