/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தடுப்பு இல்லாத தரைப்பாலம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
/
தடுப்பு இல்லாத தரைப்பாலம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
தடுப்பு இல்லாத தரைப்பாலம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
தடுப்பு இல்லாத தரைப்பாலம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
ADDED : செப் 26, 2024 01:27 AM

திருவாலங்காடு,:திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை ஊராட்சியில் இருந்து அரக்கோணம் செல்லும் சாலையில் ஓடை தரைப்பாலம் அமைந்துள்ளது. இந்த தரைப்பாலம் மாநில நெடுஞ்சாலை துறையின் பராமரிப்பில் உள்ளது.
இந்த வழியாக 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர் சென்று வரும் நிலையில், தனியார் பள்ளி வாகனம் மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.
அதேபோல், ஆயிரக்கணக்கான இருசக்கர வாகன ஓட்டிகள் கடந்து செல்லும் நிலையில், சற்று தடுமாறினாலும், ஓடையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
தற்போது, சின்னம்மாபேட்டை --- வியாசபுரம் தார்ச்சாலை சீரமைக்கப்பட்ட நிலையில், இந்த தரைப்பாலத்தின் மீது அமைக்கப்பட்ட சாலை சீரமைக்கவில்லை. அதேபோல், தடுப்புகளும் அமைக்கப்படவில்லை.
இதனால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் ஓடையில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளதாக புலம்புகின்றனர்.
எனவே, வாகன ஓட்டிகளின் நலன் கருதி, பாலத்தில் தடுப்புகள் மற்றும் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.