/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தாலுகா அலுவலகங்களில் புரோக்கர்கள்...ஆதிக்கம்: 'கமிஷன்' இன்றி சான்றிதழ் கிடைப்பது அரிது
/
தாலுகா அலுவலகங்களில் புரோக்கர்கள்...ஆதிக்கம்: 'கமிஷன்' இன்றி சான்றிதழ் கிடைப்பது அரிது
தாலுகா அலுவலகங்களில் புரோக்கர்கள்...ஆதிக்கம்: 'கமிஷன்' இன்றி சான்றிதழ் கிடைப்பது அரிது
தாலுகா அலுவலகங்களில் புரோக்கர்கள்...ஆதிக்கம்: 'கமிஷன்' இன்றி சான்றிதழ் கிடைப்பது அரிது
ADDED : ஏப் 24, 2025 09:57 PM

திருவாலங்காடு:தாலுகா அலுவலகத்தில் ஜாதி, இருப்பிடம், வருவாய், பட்டா மாறுதல் உள்ளிட்ட சான்றிதழ்கள் வழங்க தாமதம் ஏற்படுவதாகவும், புரோக்கர்கள் வாயிலாக சென்றால் சான்றிதழ் உடனடியாக கிடைப்பதாக, மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, பூந்தமல்லி, திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, ஆவடி உள்ளிட்ட ஒன்பது தாலுகாக்களில், 792 வருவாய் கிராமங்களில், 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
வருவாய்த் துறை சார்பில், மக்களுக்கு தேவையான ஜாதி, இருப்பிடம், வருமானம், முதல் பட்டதாரி, வாரிசு சான்றிதழ், பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட சான்றிதழ்கள் பெற ஆன்லைனில் விண்ணப்பித்து, படிவங்கள் சரிபார்க்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது, அரசு பொதுத் தேர்வுகள் முடிந்துள்ள நிலையில், உயர் கல்விக்கு செல்லும் மாணவர்கள் ஜாதி, வருமானம், இருப்பிட சான்றுகள் பெற்று விண்ணப்பிக்க தயாராகி வருகின்றனர்.
மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகத்தில் சான்று பெற விண்ணப்பங்களுடன் உரிய ஆதாரங்களையும் இணைத்து இருந்தாலும், ஏதேனம் காரணங்கள் கூறி தள்ளுபடி செய்வது, மனுக்களை கிடப்பில் போடுவது, மனுதாரர்களை அலைக்கழிப்பு செய்வதும் தொடர்கிறது.
விண்ணப்பதாரர்கள் சில அலுவலர்களை 'கவனித்தால்' மட்டுமே சான்றிதழ்கள் பெற முடிகிறது. பெரும்பாலும் பட்டா பெயர் மாறுதல், கூட்டு பட்டாக்களில் இந்த நிலை உள்ளது. இந்நிலையில், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கப்படும் சான்றிதழ்கள், பொதுமக்களுக்கு 16 நாட்களில் தீர்வு கண்டு, சான்றிதழ்கள் வழங்க வேண்டும்.
நீண்ட நாள் நிலுவையில் இல்லாததை உறுதி செய்யவும், காரணமின்றி தள்ளுபடி செய்வதை தவிர்க்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.