/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மின்சாரம் பாய்ந்து எருமை மாடு பலி
/
மின்சாரம் பாய்ந்து எருமை மாடு பலி
ADDED : அக் 21, 2025 11:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே மேய்ச்சலுக்கு சென்ற எருமை மாடு, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது.
கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே, மாநெல்லுார் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர், 65. இவருக்கு சொந்தமான எருமை மாடு ஒன்று, நேற்று மேய்ச்சலுக்கு சென்றது. அப்பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர் அருகே மாடு சென்றபோது, மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் உயிரிழந்தது. பாதிரிவேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.