/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சொத்து வரி பாக்கிக்காக கட்டடம் 'சீல்' உடனடியாக செலுத்தி 'டாஸ்மாக்' திறப்பு
/
சொத்து வரி பாக்கிக்காக கட்டடம் 'சீல்' உடனடியாக செலுத்தி 'டாஸ்மாக்' திறப்பு
சொத்து வரி பாக்கிக்காக கட்டடம் 'சீல்' உடனடியாக செலுத்தி 'டாஸ்மாக்' திறப்பு
சொத்து வரி பாக்கிக்காக கட்டடம் 'சீல்' உடனடியாக செலுத்தி 'டாஸ்மாக்' திறப்பு
ADDED : மார் 06, 2024 12:59 AM

மண்ணடி:சென்னை, மண்ணடி, பிரகாசம் சாலையில், மதுபான கடை உள்ளது. மதுபான கடையின் கட்டடத்தின் உரிமையாளர் சந்திரம்மாள் என்பவர் ஓராண்டாக, சொத்துவரி செலுத்தவில்லை. இவருக்கு, 2.23 லட்சம் ரூபாய் வரிபாக்கி உள்ளது.
மண்ணடி, கிருஷ்ணகோவில் தெருவில், மதுபான கடை உள்ளது. மதுபான கடையின் கட்டடத்தின் உரிமையாளர் கோவிந்தராஜ், 65 என்பவர், மூன்று ஆண்டாக சொத்து வரி செலுத்தவில்லை. இவர், 3.42 லட்சம் ரூபாய் வரிபாக்கி வைத்துள்ளார்.
இரு கட்டடத்தின் உரிமையாளர்களுக்கும் மாநகராட்சி வருவாய்த் துறை பலமுறை வரிபாக்கியை செலுத்தும்படி நோட்டீஸ் வழங்கியது. இருந்தும் சொத்து வரி பாக்கி செலுத்தவில்லை. இதையடுத்து ராயபுரம் மண்டல உதவி வருவாய் அலுவலர் முருகேசன் தலைமையிலான மாநகராட்சி குழுவினர், நேற்று இரு மதுபான கடைகளுக்கும் 'சீல்' வைத்தனர்.
இந்நிலையில், இரு கட்டட உரிமையாளர்களும் உடனடியாக சொத்துவரி பாக்கியை செலுத்தினர். இதையடுத்து சீல் அகற்றப்பட்டு, இரண்டு டாஸ்மாக் கடைகளும் உடனடியாக திறக்கப்பட்டன.
தியேட்டருக்கு 'சீல்'
திருவொற்றியூர், தெற்கு மாடவீதி தெருவில், பிரபலமான எம்.எஸ்.எம்., தியேட்டர் உள்ளது. கடந்த 2019 முதல் ஆறு ஆண்டுகளாக 21.60 லட்சம் சொத்துவரி பாக்கி நிலுவையில் இருந்தது.
வரிபாக்கி தொடர்பாக, சம்பந்தப்பட்ட தியேட்டர் உரிமையாளருக்கு, மாநகராட்சி வருவாய் துறை சார்பில், பலமுறை 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது. இருந்தும் சொத்து வரி பாக்கி செலுத்தப்படவில்லை.
இதையடுத்து, திருவொற்றியூர் மண்டல உதவி வருவாய் அலுவலர்கள் உள்ளிட்ட மாநகராட்சி குழுவினர், எம்.எஸ்.எம்., திரையரங்கிற்கு நேற்று 'சீல்' வைத்தனர்.

