ADDED : டிச 26, 2024 09:37 PM
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அருகே, பென்னலுார்பேட்டை கிராமம், பஜார் தெருவில் வசித்து வருபவர் வசந்தா, 58. நேற்றுமுன்தினம் இரவு, பக்கத்தில் தெருவில் வசிக்கும் அவரது தங்கை வீட்டிற்கு சென்று தங்கினார். நேற்று காலை, தன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே புகுந்த மர்மநபர்கள் பீரோவில் இருந்த மூன்று சவரன் நகை, 10 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.
அதே கிராமத்தில், வாணி தெருவில் வசிக்கும் சரவணன், 38, துக்க நிகழ்விற்காக உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று காலை வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த இரண்டரை சவரன், கம்மல், மூக்குத்தி மற்றும் 5,000 ரூபாய் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து பென்னலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.