/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
செங்காளம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து திருட்டு
/
செங்காளம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து திருட்டு
ADDED : ஆக 18, 2025 11:44 PM
ஊத்துக்கோட்டை, செங்காளம்மன் கோவிலில் புகுந்த மர்ம நபர்கள், உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்றனர்.
ஊத்துக்கோட்டை அடுத்த லட்சிவாக்கம் கிராமத்தில் செங்காளம்மன் கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய நாட்களில் அதிகளவு பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்வர்.
சமீபத்தில் நடந்த ஆடித்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து அம்மனை தரிசனம் செய்தனர். அப்போது, பக்தர்கள் காணிக்கை செலுத்த உண்டியல் வைக்கப்பட்டது.
நேற்று காலை கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டதை கண்டு பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்து வந்த ஊத்துக்கோட்டை போலீசார், உள்ளே சென்று பார்த்த போது, உண்டியல் பணம் திருடுபோனது தெரிந்தது. உண்டியலில் 30,000 ரூபாய்க்கும் மேல் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
ஊத்துக்கோட்டை போலீசார் அங்குள்ள 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்ததில், கோவில் உள்ளே புகுந்த மர்ம நபர், தலையில் துணியை சுற்றிக் கொண்டு உண்டியலை உடைத்தது தெரிந்தது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.