/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நந்தியாற்றில் குப்பை கொட்டி எரிப்பதால் தண்ணீர் மாசுபடும் அபாயம்
/
நந்தியாற்றில் குப்பை கொட்டி எரிப்பதால் தண்ணீர் மாசுபடும் அபாயம்
நந்தியாற்றில் குப்பை கொட்டி எரிப்பதால் தண்ணீர் மாசுபடும் அபாயம்
நந்தியாற்றில் குப்பை கொட்டி எரிப்பதால் தண்ணீர் மாசுபடும் அபாயம்
ADDED : நவ 21, 2025 03:55 AM

திருத்தணி: நந்தியாற்றில் குப்பை கொட்டி தீயிட்டு கொளுத்துவதால் தண்ணீர் மாசுப்படுவதுடன் சுவாச கோளாறு ஏற்படும் அபாயம் உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே நந்தியாறு உருவாகி, வெங்குபட்டு, பரவத்துார், ஜனகாபுரம், ராமகிருஷ்ணாபுரம், கோரமங்கலம், திருத்தணி நகராட்சி வழியாக ராமாபுரம் அருகே கொசஸ்தலை ஆற்றில் கலந்து, பூண்டி ஏரிக்கு தண்ணீர் செல்கிறது. பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் சென்னை மக்களின் குடிநீர் தாக்கத்தை தீர்க்கிறது.
நந்தியாற்றில் சில ஊராட்சிகள் மற்றும் திருத்தணி நகராட்சியில் சேரும் குப்பை கொட்டப்படுகிறது.
மேலும், குப்பை கொட்டி தீயிட்டு கொளுத்தி வருகின்றனர். இதனால் ஆற்றின் அருகே செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் ஆற்றின் கரையோரம் வசிக்கும் குடும்பத்தினர் துர்நாற்றத்தாலும், அதிலிருந்து எழும் புகையால் சுவாச கோளாறாலும் பாதிக்கப்படுகின்றனர்.
தவிர ஆற்றில் குப்பை கொட்டுவதால், தண்ணீர் மாசுப்படும் அபாயம் உள்ளது. எனவே கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து நந்தியாற்றில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

