/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மெரட்டூரில் மின்கம்பங்கள் சேதம் சீரமைக்க மக்கள் கோரிக்கை
/
மெரட்டூரில் மின்கம்பங்கள் சேதம் சீரமைக்க மக்கள் கோரிக்கை
மெரட்டூரில் மின்கம்பங்கள் சேதம் சீரமைக்க மக்கள் கோரிக்கை
மெரட்டூரில் மின்கம்பங்கள் சேதம் சீரமைக்க மக்கள் கோரிக்கை
ADDED : நவ 21, 2025 03:57 AM

பொன்னேரி: மெரட்டூரில், மின்கம்பங்கள் சாய்ந்தும், சேதம் அடைந்தும் இருப்பதால், மின்விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ள நிலையில் கிராம மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
பொன்னேரி அடுத்த மெரட்டூர் கிராமத்தில், மின்மாற்றிகளுக்கு உயர் அழுத்த ஒயர்களை கொண்டு செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள சிமென்ட் கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன.
தோட்டக்காடு - மெரட்டூர் சாலையோரம் உள்ள இந்த மின்கம்பங்கள், சாய்ந்த நிலையிலும், சிமென்ட் பூச்சுக்கள் கொட்டி உள்ளிருக்கும் இரும்பு கம்பிகள் துருப்பிடித்தும் உள்ளன.
இவை பலத்த காற்று வீசினால், உடைந்து விழும் அபாய நிலையில் இருப்பதால், மின்துண்டிப்பு மற்றும் மின்விபத்துக்களை எண்ணி கிராம மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
இம்மாத இறுதியில், புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ள நிலையில், மின்விபத்துகளை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கண்ட சேதம் அடைந்த மின்கம் பங்களை மாற்ற மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள்கோரிக்கை விடுத்து உள்ளனர்.

