/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலை தடுப்பில் மோதி நின்ற லாரி மீது பஸ் மோதி விபத்து
/
சாலை தடுப்பில் மோதி நின்ற லாரி மீது பஸ் மோதி விபத்து
சாலை தடுப்பில் மோதி நின்ற லாரி மீது பஸ் மோதி விபத்து
சாலை தடுப்பில் மோதி நின்ற லாரி மீது பஸ் மோதி விபத்து
ADDED : டிச 20, 2024 12:22 AM

செங்குன்றம்,
மாதவரத்தில் இருந்து பழைய பிளாஸ்டிக் மூட்டைகளை ஏற்றிய லாரி, நேற்று காலை 6:00 மணிக்கு, ஜி.என்.டி., சாலை வழியே, செங்குன்றத்தில் உள்ள கிடங்குக்கு சென்றது.
செங்குன்றம் அருகே சென்ற போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறிய லாரி, தடுப்புச்சுவரில் மோதி, சாலை நடுவே நின்றது. அப்போது, கோயம்பேடில் இருந்து செங்குன்றம் நோக்கி வந்த தடம் எண்: 114 மாநகர பேருந்து, லாரியின் பின்னால் மோதியது.
இதில், பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. பேருந்து ஓட்டுனர் லேசான காயத்துடன் தப்பினார். இதில், பயணியர் யாரும் பாதிக்கப்படவில்லை.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்துக்குள்ளான லாரியை அகற்றி, போக்குவரத்தை சீர் செய்தனர்.
லாரியை ஓட்டி சென்ற செங்கல்பட்டை சேர்ந்த வினோத், 30, என்பவர் மீது, இன்ஸ்பெக்டர் அலமேலு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். இந்த விபத்தால், ஜி.என்.டி., சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.