தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/பஸ் நடத்துநரை தாக்கி மாணவர்கள் அடாவடி

பஸ் நடத்துநரை தாக்கி மாணவர்கள் அடாவடி

பஸ் நடத்துநரை தாக்கி மாணவர்கள் அடாவடி


UPDATED : நவ 05, 2026 12:00 AM

ADDED : நவ 04, 2026 10:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2026 12:00 AM ADDED : நவ 04, 2026 10:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆவடி: ஆவடி அடுத்த கன்னியம்மன் நகரில் இருந்து, நேற்று மாலை புறப்பட்ட தடம் எண் ‘61கே’ மாநகர பேருந்து, 30க்கும் மேற்பட்ட பயணியருடன் ஆவடி நோக்கி சென்று கொண்டிருந்தது.

‘வேல்டெக்’ நிறுத்தத்தில் ஏறிய கல்லுாரி மாணவர்கள் ஆறு பேர், படிக்கட்டில் தொங்கியபடி வந்தனர்; பின்பக்க கதவு மூடாமல் இருக்க கல் வைத்து அடைத்தனர்.

இதை பார்த்த நடத்துநர் சர்வேசன், 50, அந்த கல்லை அகற்றி, மாணவர்களை மேலே வரும்படி கண்டித்தார். இதனால் மாணவர்கள், சர்வேசனிடம் வாக்குவாதம் செய்தனர்.

கன்னடபாளையத்தில் பேருந்து நின்றபோது, கீழே இறங்கிய மாணவர்கள், நடத்துநரிடம் மீண்டும் தகராறு செய்து தாக்கினர்.

அதனால், அரை மணி நேரத்திற்கும் மேலாக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால், பயணியர் அவதியடைந்தனர்.

தகவலறிந்து வந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து, நிறுத்தப்பட்டிருந்த ஐந்து பேருந்துகளும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us