தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பஸ் இயக்க தொழிலாளர்கள் காத்திருப்பு

பஸ் இயக்க தொழிலாளர்கள் காத்திருப்பு

பஸ் இயக்க தொழிலாளர்கள் காத்திருப்பு


ADDED : ஏப் 13, 2025 09:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2025 09:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில், 220 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில், கும்மிடிப்பூண்டி மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து, பல்லாயிரக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர்.

குறிப்பாக, கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் இருந்து வரும் தொழிலாளர்களுக்கு, போதிய பேருந்து வசதியின்றி கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

குறிப்பாக, பெண் தொழிலாளர்கள் தினசரி பல இன்னலை சந்திக்கின்றனர். எனவே, கும்மிடிப்பூண்டி சிப்காட் வழியாக பாத்தப்பாளையம், ஈகுவார்பாளையம், மாதர்பாக்கம் வரை அரசு பேருந்துகள் இயக்க வேண்டும் என, தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us