/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பாதி வழியில் நின்ற பஸ் பயணியர் கடும் அவஸ்தை
/
பாதி வழியில் நின்ற பஸ் பயணியர் கடும் அவஸ்தை
ADDED : மே 05, 2025 11:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி, திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து, தடம் எண்:42 என்ற அரசு பேருந்து, திருத்தணியில் இருந்து மேல்திருத்தணி, சூர்யநகரம், புச்சிரெட்டிப் பள்ளி, பொதட்டூர்பேட்டை வழியாக கேசவராஜகுப்பம் வரை தினமும் இயக்கப்பட்டு வருகிறது.
நேற்று மாலை 6:50 மணிக்கு, திருத்தணி பேருந்து நிலையத்தில் இருந்து கேசவராஜகுப்பம் நோக்கி புறப்பட்ட பேருந்தில், 60க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். திருத்தணி - சித்தூர் சாலையில் சென்ற போது, திடீரென பேருந்து பழுதாகி நின்றது. இதனால், ஒரு மணி நேரம் காத்திருந்து, மாற்று பேருந்தில் பயணியர் புறப்பட்டு சென்றனர்.