/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கூரை இல்லாத பஸ் நிறுத்தம்: பயணியர் கடும் அவஸ்தை
/
கூரை இல்லாத பஸ் நிறுத்தம்: பயணியர் கடும் அவஸ்தை
ADDED : ஜூலை 05, 2025 11:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மப்பேடு:பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை கூரை இல்லாததால் பயணியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடம்பத்துார் ஒன்றியம் மப்பேடு ஊராட்சியில், காவல் நிலையம் அருகே அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடை, 2013ம் ஆண்டு, தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலை விரிவாக்கத்தின் போது அகற்றப்பட்டது.
அதன்பின், 2016ம் ஆண்டு பணிகள் நிறைவடைந்தது. தற்போது, ஒன்பது ஆண்டுகளாகியும் நிழற்குடை அமைக்கவில்லை.
கடந்த 2024ம் ஆண்டு பயணியர் அமர்வதற்கு இருக்கைகள் அமைத்த ஊராட்சி நிர்வாகம் கூரை அமைக்கவில்லை.
இதனால், பேருந்துக்காக காத்திருக்கும் பகுதிவாசிகள் மற்றும் மாணவ -- மாணவியர் வெயில், மழையில் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.