/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கன்று வீச்சு தடுப்பூசி முகாம் இன்று துவக்கம்
/
கன்று வீச்சு தடுப்பூசி முகாம் இன்று துவக்கம்
ADDED : பிப் 19, 2025 08:34 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், கன்று வீச்சு நோய்க்கான தடுப்பூசி முகாம் இன்று முதல், மார்ச் 19 வரை நடக்கிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
கால்நடைகளுக்கு கருச்சிதைவு உள்ளிட்ட காரணங்களால், கன்று ஈனுதல் தடைபடுகிறது. மேலும் 4 - 8 மாத வயதுடைய கிடாரி கன்றுகளுக்கு கருச்சிதைவு நோய்க்கான தடுப்பூசி, அவசியம் போட வேண்டும்.
கிடாரி கன்றுகளுக்கு வாழ்நாள் தடுப்பூசி ஒரு முறை அளிப்பதால், நீண்ட கால எதிர்ப்பு சக்தியை உறுதிபடுத்துகிறது.
இந்நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் நஞ்சுக்கொடி, ரத்தம் மற்றும் பால் வாயிலாக நச்சுயிரி வெளியேறும். மாசுபட்ட நஞ்சுக்கொடி மற்றும் ரத்தத்தை தொட்டு சுத்தம் செய்வதாலும், பாலை நன்கு காய்ச்சாமல் குடிப்பதாலும், இந்நோய் மனிதர்களுக்கும் பரவுகிறது.
இதை தவிர்க்க, கால்நடை பராமரிப்பு துறை சார்பில் 5வது சுற்று கன்று வீச்சு நோய் தடுப்பூசி திட்டம், இன்று துவங்கி, மார்ச் 19 வரை ஒரு மாத காலம் நடைபெற உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

