/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
/
அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : செப் 07, 2025 10:11 PM
திருவள்ளூர்:தமிழக அரசின் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்க, மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில், பட்டியலின மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக, பலர் சேவை புரிந்து வருகின்றனர். அவ்வாறு சேவை புரிவோரில், ஒருவர் தேர்வு செய்யப்பட்டு, ஆண்டுதோறும் அம்பேத்கர் விருதை, தமிழக அரசு வழங்கி வருகிறது.
நடப்பாண்டிற்கான அம்பேத்கர் விருது பெற, திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று கொள்ளலாம். வரும் 16ம் தேதிக்குள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.