/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சமையல் உதவியாளர் பணி விண்ணப்பிக்க அழைப்பு
/
சமையல் உதவியாளர் பணி விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : டிச 10, 2025 06:20 AM
திருவள்ளூர்: சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளுர் மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில், காலியாக உள்ள சமையல் உதவியாளர் பணிக்கு, நேரடி நியமனம் செய்ய ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதில், நேர்காணலில் வருகை புரியாத மற்றும் பணி மறுத்த சத்துணவு மையங்களில், மீண்டும் நேர்காணல் நடத்தப்பட உள்ளது.
பூந்தமல்லி ஒன்றியத்தில்-7, வில்லிவாக்கம்-3மற்றும் கடம்பத்துார்-1 என, 11 இடங்களுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்பத்தை அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம். மேலும், www.tiruvallur.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அந்தந்த ஒன்றியங்களில் இன்று முதல் வரும் 22ம் தேதி வரை சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

