/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கடல் பாதுகாப்பு பணிக்கு அழைப்பு மீனவ கிராமங்களில் விழிப்புணர்வு
/
கடல் பாதுகாப்பு பணிக்கு அழைப்பு மீனவ கிராமங்களில் விழிப்புணர்வு
கடல் பாதுகாப்பு பணிக்கு அழைப்பு மீனவ கிராமங்களில் விழிப்புணர்வு
கடல் பாதுகாப்பு பணிக்கு அழைப்பு மீனவ கிராமங்களில் விழிப்புணர்வு
ADDED : நவ 08, 2024 08:54 PM
கும்மிடிப்பூண்டி:இந்திய கடலோர காவல் படை மற்றும் இந்திய கப்பற்படையில், நவிக், மாலுமி பணிகள் மற்றும் இதர தேசிய பாதுகாப்பு பணிகளுக்கான தேர்வு நடக்கவுள்ளது.
மீனவர்களின் வாரிசுகளுக்கு முன்னுரிமை அளிக்க கடலோர காவல் குழுமம் முடிவு செய்துள்ளது. அதன்படி, மீனவர்களின் வாரிசுகளுக்கு தேர்வுக்கான மூன்று மாத கால பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.
இலவச சிறப்பு பயிற்சி பெற தகுதியானவர்கள், வரும் 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சியின் போது, உணவு, இருப்பிட வசதி ஏற்படுத்தி தரப்படும்.
மேற்கண்ட வேலைவாய்ப்பில், மீனவர்களின் வாரிசுகளுக்கு வழங்க இருக்கும் சிறப்பு பயிற்சி வகுப்புகள் குறித்தும் அதற்கு விண்ணப்பிக்கும் முறை குறித்தும், மீனவ கிராம மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் கடலோர காவல் நிலையம் சார்பில் நொச்சிக்குப்பம் முதல் சின்னமாங்கோடு வரையிலான, 24 மீனவ கிராமகளில் உள்ள சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.