/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மானிய விலையில் உரம் விவசாயிகளுக்கு அழைப்பு
/
மானிய விலையில் உரம் விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : ஏப் 02, 2025 10:11 PM
திருத்தணி:திருத்தணி ஒன்றியத்தில், 27 ஊராட்சிகளில் பெரும்பாலானோர் விவசாயத்தை நம்பியே வாழ்கின்றனர். இவர்கள் நெல், கரும்பு, வேர்க்கடலை, காய்கறி, சிறுதானியம் போன்றவற்றை அதிகளவில் பயிரிடுகின்றனர்.
இந்நிலையில், வேளாண் துறையினர் விவசாயிகள் நலன் கருதி, பயிருக்கு தேவையான உயிர் உரங்களை மானிய விலையில் வழங்கி வருகிறது.
இதுகுறித்து திருத்தணி வேளாண் உதவி இயக்குநர் - பொறுப்பு பிரேம் கூறியதாவது:
ஒன்றியத்தில் உள்ள விவசாயிகளுக்கு ஜிங்க் சல்பேட், ஜிப்சம் போன்ற உயிர் உரங்கள் மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஜிங்க் சல்பேட் ஏக்கருக்கு, 10 கிலோவும், ஜிப்சம் ஏக்கருக்கு, 200 கிலோவும் மானிய விலையில் வழங்கப்படுகிறது.
அதாவது, ஒரு கிலோ ஜிங்க் சல்பேட் 69 ரூபாய். இதில், 25 ரூபாய் மானியமாகவும், ஒரு கிலோ ஜிப்சம், 4 ரூபாய். இதில், 1,25 ரூபாய் மானியமாகவும் வழங்கப்படுகிறது.
இவற்றை பெற ஆதார் கார்டு, நிலத்தின் சிட்டா ஆகியவற்றுடன், திருத்தணி ஒன்றிய அலுவலகம் பின்புறத்தில் உள்ள வேளாண் விரிவாக்க மையம் மற்றும் கே.ஜி.கண்டிகையில் இயங்கி வரும் துணை வேளாண் விரிவாக்க மையத்திற்கு நேரில் சென்று மானிய விலையில் உரங்களை வாங்கி கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

