/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'தாட்கோ' திட்டத்தில் பயன் பெற மகளிர் குழுவினருக்கு அழைப்பு
/
'தாட்கோ' திட்டத்தில் பயன் பெற மகளிர் குழுவினருக்கு அழைப்பு
'தாட்கோ' திட்டத்தில் பயன் பெற மகளிர் குழுவினருக்கு அழைப்பு
'தாட்கோ' திட்டத்தில் பயன் பெற மகளிர் குழுவினருக்கு அழைப்பு
ADDED : பிப் 11, 2025 12:22 AM
திருவள்ளூர், 'தாட்கோ' மகளிர் சுயஉதவி குழுவில் சேர்ந்து பயன்பெற இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
'தாட்கோ' வாயிலாக, திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிடர் இனத்தைச் சார்ந்த மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு பொருளாதார வளர்ச்சி கடன் வழங்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் பயன் பெற 18 - 55 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் இனத்தைச் சார்ந்த பெண்களாக இருத்தல் வேண்டும். ஜாதி, வருமான சான்று, ஆதார் அடையாள அட்டை, வங்கி புத்தகம் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் 12 பேர் குழுவில் செயல்பட்டு வருவதற்கான தீர்மானம் நகல் இருக்க வேண்டும்.
இந்த ஆவணத்துடன், www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.