/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காப்புக் காடுகளில் வன விலங்குகளுக்கு கூடுதல் குடிநீர் தொட்டி அமைக்கப்படுமா?

ADDED : அக் 03, 2024 02:23 AM

ஆர்.கே.பேட்டை:தேசிய வன உயிரின வாரம் ஆண்டுதோறும் அக்., 2ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஆர்.கே.பேட்டை, ஸ்ரீகாளிகாபுரம், அம்மையார்குப்பம், பொதட்டூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த இயற்கை ஆர்வலர்கள் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.
அம்மையார்குப்பம் பசுமை இயக்கத்தை சேர்ந்த தன்னார்வலர் மணிமாறன், கஜபதி தலைமையிலான குழுவினர், பனை விதைகளை சேகரித்து விதைக்கும் பணியை நேற்று துவங்கினர்.
இந்நிலையில், ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு சுற்றுப்பகுதியில் உள்ள காப்புக்காடுகளில், வன விலங்குகளுக்காக கூடுதல் குடிநீர் தொட்டிகளை கட்ட வேண்டும்.
அந்த தொட்டிகளில் மழைநீர் நிரம்பாத நிலையில், வனத்துறையினர் சார்பில், குடிநீர் தொட்டிகளை சீரான இடைவெளியில் நிரப்ப வேண்டும் என, வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 2013ல், எஸ்.வி.ஜி.புரம் காப்புக்காட்டில் குடிநீர் தொட்டியும், அதை தொடர்ந்து குளம் ஒன்றும் ஏற்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும், எஸ்.வி.ஜி.புரம் கிராமத்திற்குள் மான்கள் தண்ணீர் தேடி வருவதும், நாய்களிடம் கடிபட்டு உயிரிழக்கும் சம்பவங்களும் நடப்பது குறிப்பிடத்தக்கது.