/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மேம்பால கட்டும் பணி ஜவ்வு பருவமழைக்குள் முடியுமா-?
/
மேம்பால கட்டும் பணி ஜவ்வு பருவமழைக்குள் முடியுமா-?
மேம்பால கட்டும் பணி ஜவ்வு பருவமழைக்குள் முடியுமா-?
மேம்பால கட்டும் பணி ஜவ்வு பருவமழைக்குள் முடியுமா-?
ADDED : ஜூன் 16, 2025 02:25 AM

ஊத்துக்கோட்டை:பெரியபாளையம் அருகே ஆரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் மேம்பால பணியை, மழைக்காலத்திற்குள் முடிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆந்திராவில் உருவாகும் ஆரணி ஆறு, தமிழகத்தில் ஊத்துக்கோட்டை, பனப்பாக்கம், செங்காத்தாகுளம், பெரியபாளையம், பாலேஸ்வரம், ஏ.என்.அணைக்கட்டு வழியே பழவேற்காடு கடலில் கலக்கிறது.
இதில், பெரியபாளையம் அருகே புதுப்பாளையம் கிராமத்திற்கு செல்வதற்காக, ஆரணி ஆற்றை கடந்து செல்ல வேண்டும். மழைக்காலங்களில் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலையில், கிராம மக்கள் 10 கி.மீ., துாரம் சுற்றி, பெரியபாளையம் வழியாக தான் செல்ல வேண்டும்.
கடந்தாண்டு புதுப்பாளையம் கிராமத்திற்கு செல்லும் வழியில், ஆரணி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தற்போது, ஆமை வேகத்தில் பணிகள் நடந்து வருவதாக, அப்பகுதிவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே, வரும் மழைக்காலத்திற்குள் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.