/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலை விரிவாக்கத்திற்காக இடிக்கப்பட்ட கால்வாய் 'அம்போ'
/
சாலை விரிவாக்கத்திற்காக இடிக்கப்பட்ட கால்வாய் 'அம்போ'
சாலை விரிவாக்கத்திற்காக இடிக்கப்பட்ட கால்வாய் 'அம்போ'
சாலை விரிவாக்கத்திற்காக இடிக்கப்பட்ட கால்வாய் 'அம்போ'
ADDED : டிச 22, 2024 08:41 PM
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த, அம்மையார்குப்பத்தில், 20,000 பேர் வசித்து வருகின்றனர். அம்மையார்குப்பத்தில் இருந்து, ஆந்திர மாநிலம், ஆவலகுண்டா வழியாக சித்துாருக்கு தார் சாலை வசதி உள்ளது.
இந்த வழியாக தினசரி நுாற்றுக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. மேலும், திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ராகவநாயுடுகுப்பம், ஜனகராஜகுப்பம், கதனநகரம், பாலாபுரம், மகன்காளிகாபுரம், தாமனேரி, தேவலாம்பாபுரம், விடியங்காடு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிவாசிகளும் பயணிக்கின்றனர்.
இந்நிலையில், அம்மையார்குப்பம் பஜார் பகுதியில் இருந்து, ஆந்திரா பேருந்து நிலையம் வரையிலான சாலை மிகவும் குறுகலாக இருந்த நிலையில், கடந்த ஆண்டு இந்த பகுதியில் சாலை விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதில், சாலையோரம் உள்ள கழிவுநீர் கால்வாய் முற்றிலும் சேதம் ஆனது. பஜார் சாலையில் கழிவுநீர் தேங்கும் நிலை உள்ளது.
இதுவரை இந்த கழிவுநீர் கால்வாய் கட்டப்படாத நிலையில், இந்த வழியாக வாகனங்கள் பயணிக்க சிரமப்பட்டு வருகின்றனர்.
கால்வாயும் சிதைந்து மேலும் உருக்குலைந்து வருகிறது. அலங்காலமாக கிடக்கும் பஜார் சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என வாகனஓட்டிகள் மற்றும் வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

