/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வெள்ள பாதிப்பை தடுக்க ரூ.3.75 கோடியில் கால்வாய்
/
வெள்ள பாதிப்பை தடுக்க ரூ.3.75 கோடியில் கால்வாய்
ADDED : அக் 07, 2025 11:54 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி நகரில் மழை வெள்ளம் சூழ்வதை தடுக்க, 3.75 கோடி ரூபாய் செலவில் புதிய கால்வாய் அமைக்கப்பட உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில், கும்மிடிப்பூண்டி தாமரை ஏரி நிரம்பி, ஜி.என்.டி., சாலை, ரெட்டம்பேடு சாலை மற்றும் அந்த சாலைகளை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்வது வழக்கம்.
தாமரை ஏரி முழுதும் கழிவுநீர் தேங்கியிருப்பதால், நான்கு ஆண்டுகளாக ஏரியில் இருந்து நிரம்பி வழியும் கழிவுநீர் தேங்குவதால், அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.
இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், ஜி.என்.டி., சாலையில் உள்ள ரெட்டம்பேடு சந்திப்பில் இருந்து, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகம் வழியாக மேட்டு தெருவில் உள்ள பெரிய ஏரி உபரி நீர் கால்வாய் வரை, புதிய வடிகால்வாய் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இப்பணிகளுக்காக, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகம் சார்பில், 3.75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி, 910 மீட்டர் நீளம், 5 அடி ஆழம், 5 அடி அகலம் கொண்ட புதிய வடிகால்வாய் அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகளுக்கான 'டெண்டர்' விடப்பட்ட நிலையில், விரைவில் பணிகள் துவக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.