/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கால்வாய் பணிகளால் ரயில் பயணியர் சிரமம்
/
கால்வாய் பணிகளால் ரயில் பயணியர் சிரமம்
ADDED : ஆக 18, 2025 01:05 AM

பொன்னேரி:கால்வாய் பணிக்காக பள்ளம் தோண்டி வெளியேற்றப்பட்ட மண், சாலையில் குவித்து வைக்கப்பட்டு இருப்பதால், பொன்னேரி மக்கள் மற்றும் ரயில் பயணியர் சிரமப்பட்டு வருகின்றனர்.
பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட தாலுகா அலுவலக சாலையில், மழைநீர் செல்வதற்கான கால்வாய் அமைக்கும் பணி நடைபெறுகிறது.
இதற்காக, சாலையோரத்தில் பள்ளம் தோண்டி, கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பள்ளம் தோண்டும்போது, அங்கிருந்த மண் , சாலையில் குவித்து வைக்கப்பட்டு உள்ளது. இதனால், பொன்னேரி ரயில் நிலையம் செல்லும் பயணியர், அரசு மருத்துவமனைக்கு செல்லும் மக்கள் சிர மப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
சாலையில் குவித்து வைக்கப்பட்டுள்ள மண் குவியலால், வாகன போக்குவரத்து முடங்கியுள்ளது. மழை பெய்து, சாலை சகதியாக மாறி இருக்கிறது. நடந்து செல்வோர் தடுமாற்றம் அடைகின்றனர்.
கால்வாய் பணிக்கு பள்ளம் தோண்டியவுடன், மண்ணை அங்கிருந்து வேறு பகுதியில் கொட்டாமல், சாலையில் குவித்து வைத்துள்ளனர். எனவே, நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.