/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையில் வாகனங்கள் நிறுத்தம் போக்குவரத்து நெரிசலால் அவதி
/
சாலையில் வாகனங்கள் நிறுத்தம் போக்குவரத்து நெரிசலால் அவதி
சாலையில் வாகனங்கள் நிறுத்தம் போக்குவரத்து நெரிசலால் அவதி
சாலையில் வாகனங்கள் நிறுத்தம் போக்குவரத்து நெரிசலால் அவதி
ADDED : ஆக 18, 2025 01:06 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலைகளில் வரிசையாக வாகனங்கள் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி கன்னியம்மன் கோவில் சந்திப்பு, வேர்க்காடு, பன்பாக்கம், சிப்காட் ஏ.ஆர்.எஸ்., சாலை சந்திப்பு ஆகிய பகுதிகளில், இணைப்பு சாலைகள் உள்ளன.
இந்த இணைப்பு சாலைகள், 'பார்க்கிங்' பகுதியாக மாறி வருகிறது.
எப்போதும், வரிசைகட்டி நிறுத்தப்படும் வாகனங்களால், மற்ற வாகனங்கள் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சில நேரங்களில் விபத்து ஏற்பட்டு வருகிறது.
எனவே, வாகன நிறுத்தம் ஏற்படுத்த வேண்டும். மேலும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.