/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தேர்வு ரத்தால் செயலர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் அதிர்ச்சி
/
தேர்வு ரத்தால் செயலர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் அதிர்ச்சி
தேர்வு ரத்தால் செயலர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் அதிர்ச்சி
தேர்வு ரத்தால் செயலர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் அதிர்ச்சி
ADDED : டிச 15, 2025 04:10 AM
கடம்பத்துார்: திருவள்ளூர் மாவட்டத்தில் 88 ஊராட்சி செயலர் காலி பணியிடத்திற்கு 57,276 பேர் விண்ணப்பத்துள்ளனர். இந்நிலையில், நேர்முக தேர்வு ரத்து செய்யப்பட்டதால், விண்ணப்பதாரர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
அறிவிப்பு தமிழகம் முழுதும் காலியாக உள்ள 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளில், 88 ஊராட்சி செயலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் நிரப்பப்படும் இப்பணியிடங்களுக்கு, 10-ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு வரை தமிழ் மொழியில் படித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஊராட்சிக்கேற்ப, 25,000 - 35,000 ரூபாய் வரை சம்பளமாக வழங்கப்படும்.
இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாக, கடந்த நவம்பர் மாதம் வரை பெறப் பட்டது.
தகுதியானவர்களின் விண்ணப்பம், நவம்பர் 11 - 24ம் தேதி வரை சரிபார்க்கப்பட்டது. அதை தொடர்ந்து, தகுதிவாய்ந்த விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு, டிசம்பர் 4 - 12-ம் தேதி வரை நேர்காணல் நடத்தப்படும்.
அதன்பின், தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல், டிசம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் வெளியாகி, டிசம்பர் 17-ம் தேதி பணி நியமன ஆணை வழங்க அரசு திட்டமிட்டது.
இதில், திருவள்ளூர் மாவட்டத்தில் 88 ஊராட்சி செயலர் காலி பணியிடங்களுக்கு, 57,276 பேர் விண்ணப்பத்திருந்தனர். இதில், 834 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 56,052 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இதில், 390 மனுக்கள் நேர்முக தேர்விற்கு தேர்வு செய்யப்பட்டது. கடந்த 12ம் தேதி திருவள்ளூர் டி.ஆர்.பி.சி., பள்ளியில் நடைபெறவிருந்த நேர்காணல், நிர்வாக காரணங்களுக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
நடவடிக்கை இது, திருவள்ளூர் மாவட்டத்தில் ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, தமிழக அரசு, ஊராட்சி செயலர் பணியிடங்கள் நிரப்புவது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, விண்ணப்பதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

