/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளி சீரமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு
/
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளி சீரமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளி சீரமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளி சீரமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு
ADDED : டிச 15, 2025 04:09 AM
பள்ளிப்பட்டு: கொசஸ்தலை ஆற்றங்கரையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி, வெள்ள பாதிப்பால் சேதமடைந்து சீரமைக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், பள்ளியை சீரமைக்க 1.16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பள்ளிப்பட்டு ஒன்றியம், சொரக்காய்பேட்டை அரசு மேல்நிலை பள்ளி, கொசஸ்தலை ஆற்றை ஒட்டி அமைந்துள்ளது. இப்பள்ளியின் சுற்றுச்சுவர், 2021ல் பெய்த கனமழையின் போது இடிந்து விழுந்தது. 550 மீட்டருக்கு இடிந்து விழுந்த சுற்றுச்சுவர் இதுவரை சீரமைக்கப்படாமல் உள்ளது.
இதனால், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இதுகுறித்து நம் நாளிதழிலும் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, சுற்றுச்சுவர் மற்றும் பள்ளி கட்டடங்களை சீரமைக்க, 1.16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, சுற்றுச்சுவர், கழிப்பறை, பலவீனமான வகுப்பறை கட்டடங்களை இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்டப்பட உள்ளன. விரைவில், இதற்கான பணிகள் துவங்கும் என, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.