ADDED : ஏப் 12, 2025 09:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் தாலுகா போலீசார், நேற்று முன்தினம் காக்களூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள தனியார் கம்பெனி அருகே, சந்தேகப்படும்படியாக நின்றிருந்த வாலிபரிடம் விசாரித்தனர்.
விசாரணையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அக்சயாதாஸ், 28, என்பதும், அவரிடம் 2.50 கிலோ கஞ்சா இருந்ததும் தெரிந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார், அவரை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.