ADDED : செப் 14, 2026 08:12 PM
அ நிறம் | அளவு
கும்மிடிப்பூண்டி, செப். 15–
கும்மிடிப்பூண்டி அருகே, கஞ்சா கடத்தி வந்த நபரை, போலீசார் கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த சிப்காட் சந்திப்பு சாலையில், போலீசார் நேற்று வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற பேருந்தில் இருந்து இறங்கி நடந்து சென்ற நபரை விசாரித்தனர்.
அவர் வைத்திருந்த பையை சோதனையிட்ட போது, 1,250 கிராம் கஞ்சா சிக்கியது. அதை கடத்திய, ஒடிஷா மாநிலத்தை சேர்ந்த பின்ட்டு கவுடா, 28, என்பவரை கைது செய்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், மேலும் விசாரித்து வருகின்றனர்.
