ADDED : செப் 14, 2026 08:12 PM
அ நிறம் | அளவு
மீஞ்சூர், செப். 15–
மின் கம்பத்தில் இருந்த மின்விளக்கை மாற்றும்போது, மின்சாரம் பாய்ந்து கூலித்தொழிலாளி உயிரிழந்தார்.
மீஞ்சூர் அடுத்த வாயலுார் கிராமத்தை சேர்ந்தவர் முத்து, 50. கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம், வீட்டின் வெளியில் உள்ள மின் கம்பத்தில், பழுதான மின் விளக்கை மாற்றும்போது, மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார்.
அருகில் வசிப்போர் முத்துவை மீட்டு, மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சையில் இருந்த முத்து, நேற்று மாலை சிகிச்சை பலினின்றி உயிரிழந்தார். காட்டூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
