நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை, கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
பெரியபாளையம் ஆரணி ஆற்றங்கரையில் கஞ்சா விற்பதாக மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் நேற்று அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டு இருந்த நபரிடம் போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அவர், பெரியபாளையம் தண்டுமாநகரைச் சேர்ந்த தியாகராஜன், 18 என்பது தெரிந்தது. அவரிடம் இருந்து, 370 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் அவரை கைது செய்தனர்.