/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பள்ளி பேருந்து மீது கார் மோதி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
/
பள்ளி பேருந்து மீது கார் மோதி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
பள்ளி பேருந்து மீது கார் மோதி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
பள்ளி பேருந்து மீது கார் மோதி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
ADDED : ஜூன் 25, 2025 03:06 AM

ஊத்துக்கோட்டை:தனியார் பள்ளி பேருந்து மீது கார் மோதிய விபத்தில், கார் தீப்பற்றி எரிந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
பெரியபாளையம் அருகே தண்டுமா நகரில் செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை, 500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயில்கின்றனர்.
நேற்று மாலை வழக்கம்போல் பள்ளி முடிந்து, 30க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் பள்ளி பேருந்து கிளம்பியது.
ஓட்டுநர் வெங்கடேசன், 38, என்பவர், பெரியபாளையம் பவானியம்மன் கோவில் அருகே மாணவரை இறக்க வேனை நிறுத்தினார்.
அப்போது, பின்னால் வந்த கார், பள்ளி பேருந்து மீது மோதியதில், மாணவ - மாணவியர் பயந்து கூச்சலிட்டனர். கார் மோதிய வேகத்தில் திடீரென தீப்பற்றியது. அங்கிருந்த மக்கள் கார் மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.
இதில், அதிர்ஷ்டவசவமாக மாணவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பெரியபாளையம் போலீசார், கார் ஓட்டுநரான திருவேற்காடு கண்ணதாசனை, 32, கைது செய்து விசாரித்து வருகின்றனர்.