/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கார் கண்ணாடி உடைத்து திருட்டு
/
கார் கண்ணாடி உடைத்து திருட்டு
ADDED : ஜன 30, 2026 07:05 AM
கும்மிடிப்பூண்டி: பக்தர்கள் நிறுத்தி வைத்திருந்த மூன்று கார் கண்ணாடிகளை உடைத்து, லேப்டாப்கள் மற்றும் மொபைல்போனை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் கார்கள், செவ்வாய், ஞாயிறு மற்றும் விஷேச நாட்களில், கவரைப்பேட்டை அடுத்த புதுரோடு சந்திப்பில் நிறுத்தப்படும். அங்கிருந்து ஆட்டோ மற்றும் மினி பஸ்களில், பக்தர்கள் கோவிலுக்கு சென்று வருவது வழக்கம்.
அவர்களின் கார்களை, அங்குள்ள சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலையோரம் வரிசையாக நிறுத்தி செல்வர். செங்கல்பட்டு சதீஷ்குமார், 44, ராயபேட்டை விஜயலட்சுமி, 49, பட்டாபிராம் சாந்தகுமார், 35, ஆகியோருக்கு சொந்தமான கார்களின் கண்ணாடிகளை மர்ம நபர்கள் உடைத்தனர்.
மூன்று கார்களில் வைத்திருந்த விலை உயர்ந்த இரு லேப்டாப்கள், இரு மொபைல்போன்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

