தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/மாநில எல்லையோர சோதனைச்சாவடியில் சரக்கு வாகன போக்குவரத்து ஸ்தம்பிப்பு

மாநில எல்லையோர சோதனைச்சாவடியில் சரக்கு வாகன போக்குவரத்து ஸ்தம்பிப்பு

மாநில எல்லையோர சோதனைச்சாவடியில் சரக்கு வாகன போக்குவரத்து ஸ்தம்பிப்பு


UPDATED : நவ 28, 2026 06:16 PM

ADDED : நவ 28, 2026 06:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2026 06:16 PM ADDED : நவ 28, 2026 06:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கும்மிடிப்பூண்டி: தமிழக எல்லையோர சோதனைச்சாவடியில், அனைத்து வழித்தடங்களும் அடைக்கப்பட்டு, ஒரேயொரு தடம் வழியாக கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படுவதால், சரக்கு வாகனங்களின் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.

சென்னை – கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில், ஆந்திர எல்லையை ஒட்டிய தமிழக பகுதியில், மாநில எல்லையோர சோதனைச்சாவடி இயங்கி வருகிறது.

இந்த சோதனைச்சாவடியில், தமிழகத்தில் இருந்து ஆந்திரா நோக்கி செல்லும் வாகனங்களுக்காக, ஆறு வழி தடங்களும், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களுக்கு, 10 வழித்தடங்களும் உள்ளன.

போக்குவரத்து துறையில், ஆள்பற்றாக்குறை காரணாக, இரு சோதனைச்சதவடிகளிலும், அனைத்து வழித்தடங்களும் அடைக்கப்பட்டு, ஒரேயொரு தடம் வழியாக, கனரக வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

அந்த தடத்திலும், ஒவ்வொரு வாகனங்களாக, போக்குவரத்து துறையினர் ஆவணங்களை பெற்று தணிக்கை செய்து வருகின்றனர். இதனால், எப்போதும் சோதனைச்சாவடியில் நீண்ட வரிசையில் கனரக வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

குறிப்பாக, இரவு நேரத்தில் சரக்கு வாகனங்களின் போக்குவரத்து ஸ்தம்பிப்பதால், குறித்த நேரத்தில் செல்ல முடியாத நிலை ஏற்படுவதாக ஓட்டுனர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள், போதிய ஆட்களை நியமிக்க வேண்டும். சரக்கு வாகனங்கள் கடந்து செல்ல, நான்கு வழித்தடங்களை திறந்து, ஆவண தணிக்கை செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us