UPDATED : நவ 28, 2026 06:16 PM
ADDED : நவ 28, 2026 06:16 PM
திருவள்ளூர்: பொன்னேரி வட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கனிமங்கள், வரும் டிச., 1ம் தேதி பொது ஏலம் விடப்பட உள்ளதாக, கலெக்டர் கவிதா தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் கலெக்டர் கவிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட அத்திவாக்கம், புள்ளி லயன், பாடியநல்லுார், வடகரை, கிராண்ட்லைன், நாரவாரிக்குப்பம் மற்றும் அழிஞ்சிவாக்கம் ஆகிய கிராமங்களில், அரசின் அனுமதி பெறாத சேமிப்பு கிடங்குகளில், அனுமதியின்றி சேமித்து வைக்கப்பட்டிருந்த கனிமங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அரசின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன.
மேற்படி கிடங்குகளில் இருப்பில் உள்ள ஆற்று மணல், எம்.சாண்ட், வெள்ளை எம்.சாண்ட், ஜல்லி, சிலிக்கா மணல், கடற்கரை மணல், கலப்பட மணல் உள்ளிட்ட கனிமங்கள், வரும் டிச., 1ம் தேதி சம்பந்தப்பட்ட கிடங்குகளிலேயே, பொன்னேரி வட்டாட்சியரால் பொது ஏலம் விடப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
