/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சுங்கச்சாவடியில் வக்கீலை தாக்கிய பகுஜன் மாநில தலைவர் மீது வழக்கு
/
சுங்கச்சாவடியில் வக்கீலை தாக்கிய பகுஜன் மாநில தலைவர் மீது வழக்கு
சுங்கச்சாவடியில் வக்கீலை தாக்கிய பகுஜன் மாநில தலைவர் மீது வழக்கு
சுங்கச்சாவடியில் வக்கீலை தாக்கிய பகுஜன் மாநில தலைவர் மீது வழக்கு
ADDED : ஜன 07, 2026 06:41 AM
வெள்ளவேடு: தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி வழக்கறிஞர் பிரிவு மாநில நிர்வாகியை தாக்கிய, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் மீது, வெள்ளவேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், 2024 ஜூலை 5ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதை தொடர்ந்து, மாநில தலைவராக பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த், 55, என்பவர் நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து,ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி, தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை துவக்கி, பொதுச் செயலராக பதவி வகித்து வருகிறார். இக்கட்சியில், சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த நரேஷ்பாபு, 42. என்பவர், வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவராக பதவி வகித்து வருகிறார்.
இவர், நேற்று அதிகாலை 3:00 மணியளவில், வண்டலுார் - நெமிலிச்சேரி புறவழிச்சாலையில் உள்ள கோலப்பன்சேரி சுங்கச்சாவடியை கடப்பதற்காக, காரில் வரிசையில் காத்திருந்தார். அதேபோல், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆனந்த், கட்சி நிர்வாகிகளுடன் பட்டாபிராம் நோக்கி வரும்போது, அதே சுங்கச்சாவடியில் காரில் காத்திருந்தார்.
அப்போது, நரேஷ்பாபுவை அழைத்த ஆனந்த், “என்னை ஏன் பின்தொடர்ந்து வருகிறாய்,” எனக் கூறி, ஆபாசமாக பேசி, தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், படுகாயமடைந்த நரேஷ்பாபு, வானகரம் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நரேஷ்பாபு அளித்த புகாரின்படி, வெள்ளவேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

