/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மொபைல் போனில் பெண்ணை படம் எடுத்த தி.மு.க., நகராட்சி கவுன்சிலர் மீது வழக்கு
/
மொபைல் போனில் பெண்ணை படம் எடுத்த தி.மு.க., நகராட்சி கவுன்சிலர் மீது வழக்கு
மொபைல் போனில் பெண்ணை படம் எடுத்த தி.மு.க., நகராட்சி கவுன்சிலர் மீது வழக்கு
மொபைல் போனில் பெண்ணை படம் எடுத்த தி.மு.க., நகராட்சி கவுன்சிலர் மீது வழக்கு
ADDED : அக் 14, 2024 06:17 AM

திருத்தணி : திருத்தணி ரயில் நிலையம் எதிரே உள்ள செங்கல்வராயன் செட்டி தெருவில் வசிப்பவர் பாஸ்கர் மனைவி ராதா, 42. தம்பதிக்கு பாலசந்தர், 22, அருண்குமார், 20 ஆகிய இரு மகன்கள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன் பாஸ்கர் இறந்து விட்டார். ராதா தன் இரு மகன்களுடன் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு ராதா மகன் பாலசந்தருடன் ம.பொ.சி.சாலையில் உள்ள அப்போலோ மருந்தகத்திற்கு சென்று மருந்து மாத்திரைகள் வாங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது திருத்தணி நகராட்சி 8வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் அசோக்குமார், 42 என்பவர் மருந்தகத்திற்கு வந்தார்.
கவுன்சிலர் தன் மொபைல் போனில், ராதாவை படம் பிடித்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்ததும், பாலசந்தர், கவுன்சிலர் அசோக்குமாரிடம், 'எப்படி என் அம்மாவை படம் எடுக்கிறாய், எதற்காக படம் எடுத்தாய்' என, வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஆத்திரமடைந்த பாலசந்தர், கையால் அசோக்குமாரின் முகத்தில் கடுமையாக தாக்கினார். கவுன்சிலரும் பாலச்சந்தரை தாக்கினார்.
தகவல் அறிந்ததும், ராதாவின் இளைய மகன் அருண்குமார் வந்து கவுன்சிலரை தாக்கினார்.
இதையடுத்து கவுன்சிலர் தன் ஆதரவாளர்கள் மற்றும் கவுன்சிலர்களுக்கு மொபைல் போன் வாயிலாக தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இரு கவுன்சிலர்கள் மற்றும் 20க்கும் மேற்பட்டவர்கள் வந்து ராதா மற்றும் அவரது மகன்களை தாக்கினர்.
திருத்தணி டி.எஸ்.பி., கந்தன் மற்றும் போலீசார் இரு தரப்பினரையும் சமரசம் செய்து காயமடைந்த கவுன்சிலர் அசோக்குமார், அருண்குமார், பாலச்சந்தர் ஆகிய மூவரையும் திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ராதா அளித்த புகாரின்படி திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து கவுன்சிலர் அசோக்குமார் உள்பட 30 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.