/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாணவர்களுக்குள் தகராறு தாக்கிய தந்தை மீது வழக்கு
/
மாணவர்களுக்குள் தகராறு தாக்கிய தந்தை மீது வழக்கு
ADDED : ஜன 30, 2025 11:01 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த அகரம் கிராமத்தை சேர்ந்த அருள் மகன் வேலவன், 14. ஒன்பதாம் வகுப்பு மாணவன்.
அருகே உள்ள பள்ளிபாளையம் கிராமத்தை சேர்ந்த மூர்த்தி மகன் ஹரிஷ், 12. ஏழாம் வகுப்பு மாணவன்.
இருவரும், பஞ்செட்டியில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை, பள்ளி முடிந்து இருவரும் பள்ளி பேருந்தில் சென்றபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
நடத்துனரின் மொபைல் போனை வாங்கிய ஹரிஷ், அவரது தந்தை மூர்த்தியிடம் தகராறு குறித்து கூறியுள்ளார்.
ரெட்டம்பேடு அருகே காத்திருந்த மூர்த்தி, பேருந்தை நிறுத்தி, மாணவன் வேலவனை தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து, வேலவனின் தந்தை அருள் அளித்த புகாரின்படி, கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிந்து, மூர்த்தியிடம் விசாரித்து வருகின்றனர்.