/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இடையூறாக பேனர் வைத்த ஐந்து பேர் மீது வழக்கு
/
இடையூறாக பேனர் வைத்த ஐந்து பேர் மீது வழக்கு
ADDED : மார் 17, 2024 12:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அடுத்த அம்பேத்கர் நகரில் பொதுமக்களுக்கு இடையூறாக பேனர் வைத்திருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
ஊத்துக்கோட்டை போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். அங்கு 10 அடி நீளம், 20 அடி அகலம் கொண்ட திருமண வரவேற்பு பேனர் இருந்தது தெரியவந்தது.
பொதுமக்களுக்கு இடையூறாக பேனர் வைத்த, அதே பகுதியைச் சேர்ந்த பிரதீப், வசந்த், தங்கராஜ், கண்மணி, சிவகுமார் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

