/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தாய், மகனை தாக்கிய நால்வர் மீது வழக்கு
/
தாய், மகனை தாக்கிய நால்வர் மீது வழக்கு
ADDED : ஆக 04, 2025 11:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடம்பத்துார்,கடம்பத்துார் அடுத்த புதுமாவிலங்கை ஊராட்சி அகரம் பகுதியைச் சேர்ந்தவர் கோகுலதிலகன், 52. இவரின் மகன் வளவன், 23. இவர், நேற்று முன்தினம் இதே பகுதியில், துக்க நிகழ்ச்சிக்கு சென்று, வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது, எதிரே வந்த அதே பகுதியைச் சேர்ந்த பவித்ரன், 26, சவுத்ரி, 25, வெங்கடேஷ், 28, தமிழரசன், 27, ஆகிய நால்வரும், முன்விரோதம் காரணமாக வளவனை தாக்கினர். இதை தடுக்க வந்த வளவனின் தாய் மின்னிஅருள்மொழியையும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து சென்றனர்.
இதுகுறித்து, கோகுலதிலகன் கொடுத்த புகாரின்படி, கடம்பத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.