/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு
/
மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு
ADDED : ஜன 19, 2025 02:35 AM
திருவள்ளூர், மனைவியை கொடுமைப்படுத்தி தாக்கியதாக கணவர் உட்பட மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருவள்ளூர் அடுத்த, சேலை கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் மகன் உதயகுமார், 25. இவரது மனைவி சவீதா, 25. இவர்களுக்கு, ஐந்து மாதத்திற்கு முன், திருமணம் நடந்தது.
இந்த நிலையில், சவீதாவை, அவரது கணவர், மாமனார் மற்றும் மாமியார் ஆகியோர் கொடுமைப்படுத்தி வந்ததாகவும்; நேற்று முன்தினம், தன்னை, கணவர் தாக்கியதாக, திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, மனைவியை தாக்கிய கணவர் உதயகுமார், மாமனார் ரஞ்சித்குமார், மாமியார் பார்வதி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.