/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பெண்ணிடம் 'சைகை' காட்டியவர் மீது வழக்கு
/
பெண்ணிடம் 'சைகை' காட்டியவர் மீது வழக்கு
ADDED : ஆக 14, 2025 11:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:பெண்ணிடம் ஆபாசமாக சைகை காட்டி பின் தொடர்ந்த வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர் அடுத்த புட்லுார் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் மனைவி மீனா, 39. இவர் கடந்த 1ம் தேதி மாலை தன் இருசக்கர வாகனத்தில் புட்லுார் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த, மீனாவின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் கோட்டீஸ்வரன், 40, என்பவர், ஆபாசமாக சைகை காட்டி பின் தொடர்ந்து சென்றுள்ளார்.
இதுகுறித்து மீனா நேற்று அளித்த புகாரின்படி, திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.