/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
9 வயது சிறுமிக்கு தொல்லை இருவர் மீது வழக்கு பதிவு
/
9 வயது சிறுமிக்கு தொல்லை இருவர் மீது வழக்கு பதிவு
9 வயது சிறுமிக்கு தொல்லை இருவர் மீது வழக்கு பதிவு
9 வயது சிறுமிக்கு தொல்லை இருவர் மீது வழக்கு பதிவு
ADDED : ஜன 07, 2026 06:43 AM
திருத்தணி: வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த ஒன்பது வயது சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த இருவர், பலாத்காரம் செய்ய முயன்றது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருத்தணி காவல் மாவட்ட எல்லைக்குட்பட்ட ஒன்பது வயது சிறுமி, நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த நாகேந்திரன், 51, நெல்சன், 23, இருவரும், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினரை கண்டதும், இருவரும் தப்பியோடினர். நேற்று பாதிக்கப்பட்ட சிறுமி, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், திருத்தணி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இருவரையும் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

