/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையோரம் பிளாஸ்டிக் கழிவுகள் கால்நடைகள் உண்ணும் அவலம்
/
சாலையோரம் பிளாஸ்டிக் கழிவுகள் கால்நடைகள் உண்ணும் அவலம்
சாலையோரம் பிளாஸ்டிக் கழிவுகள் கால்நடைகள் உண்ணும் அவலம்
சாலையோரம் பிளாஸ்டிக் கழிவுகள் கால்நடைகள் உண்ணும் அவலம்
ADDED : ஜூலை 03, 2025 02:48 AM

ஊத்துக்கோட்டை:வீடுகளில் கட்டி வளர்க்காமல் சாலையில் கொட்டப்படும் கழிவுகளை, கால்நடைகள் உண்ணுகின்றன.
ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில் ஏராளமான வீடுகள், வணிக நிறுவனங்கள் உள்ளன. இப்பகுதியில் சிலர் மாடுகள் வளர்க்கின்றனர். இவர்கள் மாடுகளை வீடுகளில் வைத்து பராமரிக்காமல் சாலையில் சுற்றித் திரிய விடுகின்றனர்.
இவை, அங்குள்ள காய்கறி, பழம், பூ ஆகிய கடைகளுக்கு செல்கின்றன. அப்போது வியாபாரிகள் அவற்றை துரத்தும்போது தறிகெட்டு ஓடுகின்றன. அப்போது பாதசாரிகள், வாகன ஓட்டிகள் மீது மோதி விபத்து ஏற்படுத்துகின்றன.
இப்பகுதியிலும் ஹோட்டல்களின் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாக உள்ளது. இந்த பிளாஸ்டிக் கழிவுகளை சாலையில் வீசி விடுகின்றனர்.
சாலையில் சுற்றித் திரியும் மாடுகள், இந்த பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணுகின்றன. பேரூராட்சி நிர்வாகம் சார்பில், மாடுகளின் உரிமையாளர்களுக்கு 'நோட்டீஸ்' வழங்கியும், எவ்வித பலனும் இல்லை.
எனவே, மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சாலையில் திரியும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.