/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையோரம் கால்நடைகள் ஆக்கிரமிப்பு கண்டுகொள்ளாததால் தொடரும் அவலம்
/
சாலையோரம் கால்நடைகள் ஆக்கிரமிப்பு கண்டுகொள்ளாததால் தொடரும் அவலம்
சாலையோரம் கால்நடைகள் ஆக்கிரமிப்பு கண்டுகொள்ளாததால் தொடரும் அவலம்
சாலையோரம் கால்நடைகள் ஆக்கிரமிப்பு கண்டுகொள்ளாததால் தொடரும் அவலம்
ADDED : ஜூன் 20, 2025 02:14 AM

கொண்டஞ்சேரி:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட கொண்டஞ்சேரி ஊராட்சி. இப்பகுதியில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கால்நடை வளர்ப்பை பிரதான தொழிலாக கொண்டுள்ளனர்.
வீடுகளில் வளர்க்கும் கால்நடைகளை இப்பகுதியில் உள்ள தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையோரம் கட்டி போட்டு மாட்டுத்தொழுவமாக மாற்றியுள்ளனர். இதனால் நெடுஞ்சாலையோரம் கட்டி வைக்கப்படும் கால்நடைகள் சாலையின் பாதி பகுதியில் படுத்து இளைப்பாறுகின்றன.
இதனால் இவ்வழியே வாகனங்களில் செல்வோர் கடும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.
எனவே, மாவட்ட நிர்வாகம் நெடுஞ்சாலையோரம் கால்நடைகளை கட்டுவதை தடுத்து நிறுத்தவும், மாட்டுத்தொழுவத்தை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கேரிக்கை விடுத்துள்ளனர்.